உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோருவதற்குரிய சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.
ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்புமனு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் இதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சிசபைத் தேர்தல் சட்டத்தில் இதற்குரிய திருத்தங்கள் பற்றி சட்டமா அதிபரிடம் அரசாங்கம் ஆலோசனை கோரியுள்ளது.
அந்த சட்ட விளக்கம் கிடைக்கப்பெற்ற பின்னர் ஜனவரி மாதம் அளவில் சட்டதிருத்த யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
தேர்தல் முறைமையிலோ அல்லது உறுப்பினர்கள் எண்ணிக்கையிலோ மாற்றம் வராது. வேட்பு மனுக்கள் மாத்திரமே புதிய ஏற்பாட்டின் பிரகாரம் இரத்து செய்யப்படவுள்ளது.