பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றுவதற்கு எதிரணிகள் வியூகம் வகுத்துவரும் நிலையில், அதற்குரிய ஆணையை மக்கள் வழங்கமாட்டார்கள் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்திக்கே மக்கள் வழங்குவார்கள் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தலில் நாம் வென்றுவிட்டோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் அதிகாரமும் தேவை. எனவே, எவ்வித ஐயமும் இன்றி அதற்குரிய ஆணையை மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்பது உறுதி. எதிரணிகள் எப்படிதான் உளறினாலும் மக்கள் எமது பக்கமே நிற்கின்றனர்.” – என்றார்.










