எம்.பிக்களுக்கு தனி எரிபொருள் நிரப்பு நிலையம்?

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு, நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவிலுள்ள எரிபொருள் நிலையம் ஊடாக, எரிபொருளை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு, சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு வழங்கவுள்ளது.

அத்துடன், எரிபொருள் வழங்கும்போது அறவிடப்படும் பணத்தை பெற்றுக்கொள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரை பொலிஸ் எரிபொருள் நிலையத்திற்கு அனுப்புவதற்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

எரிபொருள் பெற்றுக் கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இருக்க வேண்டும் என்பதுடன் பணம் செலுத்தியே எரிபொருள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles