எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள்

சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் வெதுப்பங்கள் என்பவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles