எல்ல – வெல்லவாய வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராவணல்ல பகுதியில் இருந்து வெல்லவாய பக்கம் பயணித்த ஆட்டோவும், வெல்லவாய பக்கம் இருந்து எல்ல பக்கமாக பயணித்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஆட்டோவில் பயணித்த 70 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
ஆட்டோவை ஓட்டிய பெண் காயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்










