ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வருகிறார் மோடி: மலையக தலைவர்களுடனும் சந்திப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மலையக தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார் என தெரியவருகின்றது.

இலங்கை அரசாங்க தரப்பினருடனான சந்திப்பின்போது இரு தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles