ஏற்றுமதி வருமானம் 23 வீதத்தால் அதிகரிப்பு

இலங்கை கடந்த வருடத்தில் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி மூலம் 15.1 பில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இது 2020இல் அறிவிக்கப்பட்ட 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 23% சதவீத அதிகரிப்பாகுமெனவும் தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, 2022 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி ஊடாக 15.12 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டு 12.3 பில்லியன் டொலராக காணப்பட்ட வருமானத்தை ஒருவருட காலத்தில் 3.9 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளோம். 2 022 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பது எமது பிரதான இலக்கு என அமைச்சர் தெரிவித்தார்.இரண்டாம் உலகமகா யுத்தத்தை காட்டிலும் கொவிட் -19 வைரஸ் தாக்கம் பூகோள பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள நிலைமையில் இலங்கையர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலங்கை எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளமைக்காக ஏற்றுமதியாளர்களுக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles