‘ஒத்துழைப்பு தொடரும்’ – ஜனாதிபதியிடம் அமெரிக்க தூதுவர் உறுதி

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

குறித்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகப்பூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுவான அணுகுமுறையின் மூலம் முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய அரசாங்கத்தின் எதிர்கால பணிகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் தூதுவர் உறுதியளித்தார்.

Related Articles

Latest Articles