கஞ்சா போதைப்பொருளுடன் மடூல்சீமையில் ஒருவர் கைது!

கஞ்சா போதைப்பொருளுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (09/30) கைது .

கஞ்சா போதைப்பொருள் சகிதம் 42 வயதுடைய நபரொருவர், மடூல்சீமை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹதோவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

நிருபர் – ராமு தனராஜ்

Related Articles

Latest Articles