கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவன் கைது

இரத்தினபுரி –  காவத்தையில் இனந்தெரியாதவர்கள் தன்னை வேன் ஒன்றில் கடத்தி வந்ததாக பொலிஸாரிடம் பொய் கூறிய சிறுவனை நேற்றையதினம் (17) கைதுசெய்துள்ளதாக மட்டுதலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காவத்தையில் தாய் ஒருவர் 17 வயதுடைய தனது மகனை ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பிய நிலையில், எடுத்த பணத்தை தொலைத்துவிட்ட சிறுவன் வீடு செல்ல பயந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றுள்ளான்.

அங்கு காவத்தையில் இருந்து வேன் ஒன்றில் கடத்திவரப்பட்ட நிலையில் தான் வேனில் இருந்து தப்பி ஓடிவந்ததாக பொய்யை கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மட்டு பொலிஸார், காவத்தை பொலிஸ் நிலையத்திற்கு சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி அவன் தொடர்பாக விசாரித்தார்.

இதன்போதே , சிறுவன் கடத்தப்பட்டதாக எந்தவித முறைப்பாடும் இல்லை எனவும், இதற்கு முன்பும் 3 தடவை வீட்டில் இருந்து பணத்தை எடுத்து தப்பி ஓடியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிறுவனை கைதுசெய்த பொலிஸார் சிறுவனின் குடும்பத்தவர்களை வரவழைத்து சிறுவனை எச்சரித்து அவர்களிடம் இன்று (18) ஒப்படைத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles