கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!

மாத்தறை கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் கடல் அலையில் அள்ளுண்டுச்சென்று உயிரிழந்துள்ளனர் என்று மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.​

நான்கு பேர் நீராடச் சென்றனர் என்றும், அதில் இருவரே உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.​

இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்வதாகக் கூறி சென்றுள்ளனர் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.​

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles