ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்று (19) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் இரண்டாவது டோஸை (Dose) செலுத்தவேண்டியவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
