கண்டியில் கடவுச்சீட்டு பெற வரும் இளைஞர்களுக்கு ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்து 50,000 ரூபா வரை பணம் பெற்றதாகக் கூறப்படும் அந்த அலுவலகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் சில விண்ணப்பங்களை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டு பணத்திற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக 40,000 முதல் 50,000 ரூபா வரையிலும், சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்காக 6000 ரூபா வரையிலும் சந்தேகநபர்கள் பெற்றுள்ளதாக இந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் 25,000 ரூபாவை முற்பணமாக பெற்றுக் கொண்ட போது இளைஞர்கள் குழுவொன்றினால் மூன்று சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










