கந்தப்பளை இளைஞன் நீரில் மூழ்கி பலி!

ஊவா – பரணகம, ரத்தம்ப – தியகொலார ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா, கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த குறித்த இளைஞன் தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றுக்குச் நீராட சென்ற நிலையில், ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து இளைஞனை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, இளைஞன் மீட்கப்பட்டு
வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles