கனடா மாநகர தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி!

கனேடிய தலைநகர் ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்காபுறோ வடக்கு தொகுதியில் கல்விச் சபை உறுப்பினர்பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாசினி ராஜகுலசிங்கம் அமோக வெற்றி பெற்றார்.

ஸ்காபுறோரூச் பார்க் தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா அமோக வெற்றி பெற்றார்.

ஸ்காபுறோ மத்தி தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சண் அமோக வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles