‘கப்புடா பஸில் இருக்கும்வரை மாற்றம் ஏற்படாது’ – ராதா விளாசல்

” பிரதி சபாநாயகர் தெரிவில் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை இல்லாமல் செய்தவர் பஸில் ராஜபக்சவே. இவரை இலங்கை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாதவரை மாற்றத்தை கொண்டு வர முடியாது.”

இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதி சபாநாயரை தெரிவு செய்யும் விடயத்தில் பிரதமரின் கருத்தாக இருந்தது பெண் ஒருவரை தெரிவு செய்ய முடியுமாக இருந்தால் அது சிறப்பானது என. அதன்படி ஜக்கிய மக்கள் சக்தி அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி பெண் ஒரு வரை பெயரிட்டிருந்தது. அதற்கு அனைவரும் சம்மதித்திருந்த நிலையிலேயே தெரிவு நடைபெற்ற அன்று காலையில் பஸில் ராஜபக்சவின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக பாராளுமன்றத்தில் இருண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டது.எனவே இந்த சந்தர்ப்பத்தில் வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக தெரிவு செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டதுடன் இரண்டு குழுக்களாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஒற்றுமைiயாக செயற்பட தீர்மானித்திருந்த விடயத்தை இல்லாமல் செய்து கட்சிகளை பிரித்தவர் இந்த பெசில் ராஜபக்சவே.இவருக்கு இது கைவந்த கலை.கடநத காலங்களில் இவர் சிறுபான்மை கட்சிகளை பிரித்து துண்டாடினார்.இன்றும் அதே வேளையை இவர் தொடர்ந்து செய்கின்றார்.
அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்ஹ நினைப்பது போல நடக்க முடியாது என்பதை இந்த பிரதி சபாநாயகர் தெரிவின் மூலமாக பெசில் ராஜபக்ச பிரதமருக்கு உணர்த்தியுள்ளார்.

எனவே இவ்வாறானவர்களுடன் பிரதமர் தொடர்ந்து எப்படி பயணிக்கப்போகின்றார்?அவர் எதிர்பார்க்கின்ற மாற்றத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார்.?தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது அல்லது அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படுவது என்பதெல்லாம் வெறும் பேச்சில் மாத்திரமே இருக்க முடியும்.செயலில் காட்ட முடியாது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ இந்த விடயம் தொடர்பாக உடனடியாக சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.யாருடன் தொடர்ந்து பயணிப்பது.அப்படியானால் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?என்பதை சிந்தித்து செயற்பட வேண்டும்.இல்லாவிட்டால் அவர் எதிர்பார்க்கின்ற இலக்கை நோக்கி ஒரு நாளும் பயணிக்க முடியாது.பெசிலின் தலையீடு தொடருமாக இருந்தால் ஏனைய கட்சிகள் பிரதமருக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்ற ஆதரவை தொடர முடியுமா? என்ற கேள்வியும் ஏற்படும்.எனவே இது தொடர்பாக பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?என்ற கேள்வியே இப்பொழுது எங்களிடம் இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles