கம்மன்பில பதவி துறக்கலாம் – மொட்டு கட்சி அறிவிப்பு

” வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு கோரியிருந்தோம். ஆனால் அவரை பதவி விலக்குவதற்கு எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கமுடியாது. பதவி விலகுவதும், விலக்குவதும் இறுவேறு விடயங்களாகும் ” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது ” எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு பொறுப்பையேற்று வலுசக்தி அமைச்சர் கம்மன்பில பதவி விலகவேண்டும் என நீங்கள் அறிக்கை விட்டிருந்தீர்கள். தற்போது அவரை பதவி விலக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவீர்களா” என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அப்போதைய சூழ்நிலையில் எமது கட்சி அங்கத்தவர்களின் நிலைப்பாட்டையே நான் தெளிவுபடுத்தி அறிக்கை விடுத்தேன். பதவி விலகுமாறு கோரினோம். ஆனால் எதிரணியின் தேவைக்கேற்ப பதவி விலக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது. இதுதான் கட்சி நிலைப்பாடு. அமைச்சர் கம்மன்பில பதவி விலகுவது வேறுகதை. விலக்குவது வேறு. அந்தவகையில் இப்பிரேரணையை எமது கட்சி ஆதரிக்காது.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து நாம் நாடகமாடவில்லை. கட்சி அங்கத்தவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்துதான் எதிர்ப்பை வெளியிட்டோம். அந்தவகையில் எரிபொருட்களின் விலையை குறைக்ககூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை நிதி அமைச்சர் நிச்சயம் செய்வார்.

அரசின் பலத்தை குறைப்பதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்ககூடாது என நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles