காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ். நாவலா் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக கவனயீா்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இன்று காலை 9 மணி தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தினர். அத்துடன், மகஜா் ஒன்றையும் ஐ.நாவுக்கு கையளித்திருக்கின்றனா்.

போராட்டத்தின்போது கதறி அழுத காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்,

”சா்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மைகளை வெளிப்படுத்துங்கள். உண்மைகளை கண்டறிந்து சொல்லாவிட்டால் நாங்களே தற்கொலை செய்வோம். இல்லையென்றால் எங்கள் மீது குண்டுகளை போட்டு கொலை செய்துவிடுங்கள்” என கதறி அழுதனா்.

இன்றைய போராட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக குறைந்தளவு மக்களே கலந்துகொண்டிருந்தனர். மேலும் வட மாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டு ஆதரவளித்தார்.

Related Articles

Latest Articles