டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏழு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்து இன்று (20) மீண்டும் ஆரம்பமானது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, பொடி மெனிகே ரயிலின் வருகையுடன் இந்தச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
நானுஓயா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் மூலம் இந்த ரயில் பாதை பயணிகளுக்காகத் திறந்து விடப்பட்டதால், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது பயணிகள் நாணுஓயாவிலிருந்து பதுளை வரை பயணிக்க முடிவதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு முதல் பதுளை வரையிலான முழுமையான ரயில் சேவையை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.










