கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்!

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.

இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.

இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார். அதன் பிறகு அவர் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிபர் ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்து உள்ளார்.

விபத்து நடந்ததும் அவருடன் சென்ற மருத்துவர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 2 பேரும் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles