மடுல்சீமை எக்கிரிய பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை, அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் நேற்று (6) பிற்பகல் கைது செய்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 48, 49, 59 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், இவர்களில் பலாங்கொடை, தியத்தலாவ, எக்கிரிய மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒக்கிரிய, அடகிரிய பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாணிக்கக்கல் அகழ்வுக்காக (டோவனா) குழிகள் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களுடன், மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய அகழ்வுத் தட்டுகள், மண்வெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண அவர்களின் ஆலோசனையின் பேரில், மடோல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரசிக்க தசந்த வீரகோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் சார்ஜன்ட் ஜகத் (38010), பொலிஸ் சார்ஜன்ட் லயனல் (2516), பொலிஸ் கான்ஸ்டபிள் தாரக்க (75672) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ரி. சனேவிரத்ன (11576) ஆகிய அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மடோல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
த.டிமேஷன்
