கொரோனாவால் பதுளையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் தியத்தலாவை வைத்தியசாலையில் 01-03-2021  (இன்று) மரணமானவருடன், கொவிட்19 தொற்றினால் மரணமானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் தியத்தலாவை வைத்தியசாலையில மாரடைப்பு நோய் காரணமாக 68 வயதுடைய நபர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிகிச்சை பயனளிக்காமையினால் அவர் இன்று மரணமானார்.

அந்நிலையில் ஏற்கனவே அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனை அறிக்கையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அவரது சடலம் 01-03-2021இல் கொரோனா சுகாதார வழிமுறைகளுக்கமைய தகனம் செய்யப்பட்டது.

2020 நவம்பர், டிசம்பர், 2021இல் நிறைவான ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களில் பதுளை மாவட்டத்தின் 15பிரதேச செயலகப்பிரிவுகளிலும் கோவிட்19 தொற்றினால் எட்டுமரணங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த இரு மாதங்களில் 1,205 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். 3383 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எம். செல்வராஜா, மலர்வேந்தன்

Related Articles

Latest Articles