கொழும்பில் பல்கலை மாணவியின் சடலம் மீட்பு : வெல்லம்பிட்டியைச் சேர்ந்த இளைஞர் கைது!

பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம்  கொழும்பு 7  குதிரைப் பந்தையத்  திடலில் இன்று (ஜன 17)  கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதான பல்கலைக்கழக மாணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 23 வயதுடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞானபீட மாணவியான இவரின்  கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும்  பொலிஸார் கூறுகின்றனர்.

Related Articles

Latest Articles