கொவிட் தொற்றினால் மூவர் உயிரிழப்பு

கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இவ் விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நேற்று 8 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 13 பேருக்கு நேற்று முன்தினம் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles