கோட்டாவை ஜனாதிபதியாக்கியது தான் நாம் இழைத்த வரலாற்று தவறு – பவித்ரா சுட்டிக்காட்டு

” அரசியல் அனுபவமற்ற கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இழைத்த பெறும் தவறு.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பண்டாரகம பகுதியில் நேற்று நடைபெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரணில் விக்கிரமசிங்க அனுபவமுள்ள அரசியல்வாதி. சிறந்த சர்வதேச தொடர்பும் உள்ளது. இவை உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற்கொண்டே அவரை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் ஆதரவு வழங்கினோம்.

அரசியல் ரீதியில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் எமக்கு விமர்சனம் இருந்தது. விமர்சனங்களையும் முன்வைத்திருந்தோம். ஆனால் அவை தனிப்பட்ட பிரச்சினைகள் அல்ல. அரசியல் ரீதியிலானவை.

மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாம் சிறப்பாக செயற்பட்டோம். பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால் ஒரு இடத்தில் தவறிழைக்கப்பட்டது. அதுதான் அரசியல் அனுபவமற்ற கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles