சச்சின் டெண்டுல்கரின் மகனுடன் சஜித்தை ஒப்பிட்டு ஹரின் கடும் தாக்கு

” இந்தியாவில் தற்போது ஐ.பி.எல்.போட்டி நடைபெற்றுவருகின்றது. இதில் சச்சின் டெண்டுல்கரின் மகனும் விளையாடுகின்றார். ஆனால் அவர் சச்சின்போல பிரகாசிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காக அவரால் சச்சின் ஆகிவிட முடியாது.

அதேபோலவே அந்த ஜனாதிபதி ( ரணசிங்க பிரேமதாச) சிறப்பாக செயற்பட்டார் என்பதற்காக அவரின் மகனால் (சஜித்) சிறப்பாக செயற்பட முடியாது.”

இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், சஜித் மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர்மீது சரமாரியாக சொற்கணைகளையும் தொடுத்தார்.

Related Articles

Latest Articles