6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரஷீத் கான் அசத்தல்: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் ரஷீத் கான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்த, அயர்லாந்து அணியை 92 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வடக்கு அயர்லாந்தின் மகேராமசன் கிராமத்தில் உள்ள பிரீடி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், 300 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலளித்து ஆடிய அயர்லாந்து அணி, 63 ரன்களுக்குள் கடைசி 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தமது தலைமுறையின் மிகச்சிறந்த லெக் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரஷீத் கான், அயர்லாந்தின் கடைசி 7 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற ஈர்க்கக்கூடிய பந்துவீச்சை பதிவு செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் இது அவரது 3-வது “6 விக்கெட் சாதனையாகும்”. ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாக 2017-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது நீடிக்கிறது.

போட்டியின் தொடக்கத்திலேயே ரஷீத் கான் இரு முக்கிய விக்கெட்டுகளைச் சரித்தார். கேட் கார்மைக்கேலுடன் இணைந்து 72 ரன்கள் சேர்த்து அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆண்டி பால்பிர்னியை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஹேரி டெக்டரையும் கேட்ச் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

மழை காரணமாக போட்டி தலா 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அயர்லாந்து அணி கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, 137 பந்துகளில் 156 ரன்கள் தேவை என்ற வலுவான நிலையில் இருந்தபோது, லோர்கன் டக்கரின் எதிர்பாராத ரன் அவுட் மூலம் அவர்களின் விக்கெட் சரிவு தீவிரமடைந்தது.

முகமது சலீம் வீசிய பந்தில் டக்கருக்கு எதிரான எல்.பி.டபிள்யூ (LBW) மேல்முறையீட்டை நடுவர் நிராகரித்தார். இருப்பினும், டக்கர் ரன் எடுக்க முயன்றபோது, ‘பாயிண்ட்’ திசையில் நின்ற செடிகுல்லா அடால் நேரடித் தாக்குதல் மூலம் அவரை ரன் அவுட் செய்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜத்ரான் 84 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன் சேர்த்த வீரரானார்.

இத்தொடரின் அடுத்த போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles