எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையில் முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி இரவு நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் பிரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவராக தற்போது செயற்படும் கருஜயசூரிய, சிவில் செயற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்.
அதேவேளை, ரணில் மற்றும் சஜித் தரப்புகளை இணைப்பதற்கான முயற்சியாகக்கூட இச்சந்திப்பு இருந்திருக்கலாம் என ஊகம் வெளியிடப்படுகின்றது.