சஜித்துடன் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தார் நவீன்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே நவீன் திஸாநாயக்கவின் தம்பியான மயந்த திஸாநாயக்கவால் மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.

“ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு உங்கள் அண்ணன் தயாராகிவருகின்றார். அவரை இந்த பக்கத்துக்கு வருமாறு நீங்கள் அழைக்கவில்லையா அல்லது அந்த பக்கம் சென்றுவிடுவீர்களா.” – என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மயந்த திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,

” நான் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்லமாட்டேன். ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு எனது சகோதரருக்கு தேர்தலுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தேன். அந்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டார்.

எப்படி இருந்தாலும் அவரின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் வராது என்றே நம்புகின்றேன். 25 வருடங்களாக அப்பதவியில் இருப்பவர் இன்னும் பல வருடங்கள் இருப்பதற்கு முற்படுவார்.” – என்றார்.

Related Articles

Latest Articles