சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று சிறார்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Guangdong மாநிலத்தில், Lianjiang பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே இன்று திங்கட்கிழமை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று சிறார்கள், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு பெற்றோர்களே இவ்வாறு கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்று 20 நிமிடங்களுக்கு பிறகு 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது திட்டமிட்ட அடிப்படையிலான தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சீனாவில் பாடசாலைகளில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஜுன் மாதம்கூட சம்பவமொன்று பதிவானது. இதில் 37 மாணவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
