அகமதாபாத் நகரில் இருந்து லண்டனுக்கு இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். பயணி ஒருவர் உயிர் பிழைத்ததை அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் உறுதி செய்துள்ளார்.
“11ஏ இருக்கையில் பயணித்த பயணி ஒருவரை போலீஸார் உயிரோடு இருப்பதை அடையாளம் கண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என அவர் தெரிவித்தார்.
11ஏ இருக்கையில் பயணித்த பயணியின் பெயர் ரமேஷ் விஷ்வகுமார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 38 என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
