சீனாவிடம் இருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhenhong) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க இந்த நன்கொடையை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென் ஹொங்வினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதுடன், சீன தூதரக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன உட்பட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles