சீனாவின் எண்ணெய் விநியோக நிறுவனத்துடன் அமைச்சர் பேச்சு

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கும் சீனாவின் பெட்ரோ சைனா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள், மீள செலுத்தும் முறைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பெட்ரோ சைனா அதிக அளவில் எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 10 ஆண்டுகளாக சிறந்த புரிந்துணர்வை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், வெளிநாட்டு எண்ணெய் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளதாக நம்பப்படுகின்றது.

Related Articles

Latest Articles