சீரற்ற காலநிலையால் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: ஆறு பேர் உயிரிழப்பு!

கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 21 மாவட்டங்களில் 98 ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 22 முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியை அடிப்படையாகக்கொண்ட தரவுகளே இது.
சீரற்ற காலநிலையால் அறுவர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். 6பேர் காணாமல்போயுள்ளனர்.

82 வீடுகள் முழுமையாகவும், 1,465 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles