சீரற்ற காலநிலையில் 9,745 பேர் பாதிப்பு

கொழும்பு உட்பட நாட்டில் 14 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 2, 641 குடும்பங்களைச் சேர்ந்த 9,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 6 வீடுகள் முழுமையாகவும், 2,576 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles