ஜனாதிபதி – இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரனை இன்று ( 04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார்.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள முரளிதரன் இன்று (04) காலை இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles