ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜுலை மாதம் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
இதன்போது பிரதமர் மோடி உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாதத்தையும் இந்திய தரப்புக்கு ஜனாதிபதி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஐரோப்பிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னரே, டில்லி செல்லவுள்ளார்.
