ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகையில் பெறுமதியான சொத்துக்கள் கொள்ளை குறித்து விசாரணை

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திர குமார மற்றும் மேல் மாகாண குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹான் பிரேமரத்ன ஆகியோருக்கு அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் அவர் உத்தரவை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்குள் சென்றவர்கள் அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதகவும் தேசபந்து தென்னகோன் இந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

உடனடியாக இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சாட்சியங்கள் அழிக்கப்படும் முன்னர் சாட்சியங்களை சேகரிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னகோன் கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்று ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றவர்கள், அவற்றுக்குள் எடுத்த காணொளிகள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles