ஜனாதிபதியின் பிறந்தநாள் இன்று!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினம் இன்றாகும். அதனையொட்டி விசேட மத அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பிறந்த நாள் நிகழ்வை எளிமையாக நடத்தற்பாடு செய்யப்பட்டுள்ளாக அறிய வருகிறது.

முன்னாள் அமைச்சரவை அமைச்சரான டி.ஏ.ராஜபக்சவின் புதல்வரும் இலங்கையின் 5 வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச 1949 ஆம் ஆண்டு பிறந்தார்.

அவர் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றதோடு , 1971 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்தார். தனது இராணுவ சேவையின்போது அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகளில் முதுமாணிப் பட்டமொன்றைப் பெற்றதோடு பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் உயர்தரப் பயிற்சிகள் பெற்றார். யுத்தகாலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆணையிட்டு நடத்தினார்.

1991 இல் லெப்டினன் கேர்ணலாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயின்று அதன்பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு கலிபோர்னிய, லொயலா சட்டக் கல்லூரியில் ஒரு தகவல் தொழில்நுட்ப தொழில்வாண்மையாளராகப் பணியாற்றி 2005 இல் இலங்கைக்குத் திரும்பினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles