ஜனாதிபதியுடன் இ.தொ.கா நாளை பேச்சு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை ஜனாதிபதியுடன் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்பி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேற்படி கடந்துரையாடலில்அனைத்து மலையக அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

அதேவேளை, அகரப்பத்தன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்துக்கு சம்பந்தப்பட்ட கம்பெனி உரிய தீர்வை வழங்கத் தவறுமானால் நுவரெலியா மாவட்டத்திற்கும் அந்த போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

ஒரு இலங்கையராக வரவு செலவுத் திட்டத்தை வரவேற்கும் அதேவேளை, மலையகத்திற்கு அதில் எதுவுமே வழங்கப்படாதால் மலையகத் தமிழன் என்ற வகையில் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles