வெலிமடை, கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மின்வெட்டு காரணமாக கடந்த 29 ஆம் திகதி பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின் 9 வயதான மகளும் 4 வயதான மகனும் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
சிறார்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) அதிகாலை தாய் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நன்றி – நியூஸ்பெஸ்ட்
