ஜே.வி.பி. மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், நாளையே பாராளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து செய்ய முடியுமல்லவா? அவ்வாறில்லை என்றால் அதனை நீக்குவதாக மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்தமைக்காக ஜே.வி.பி. அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.

ஐ.தே.க.வின் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் வியாழக்கிழமை (3) யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றமின்றி இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இந்திய – இலங்கை நட்புறவு பலப்படுத்தப்படும். அதற்கான முழுமையான ஒத்துழைப்பை ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்துக்கு வழங்குவோம்.

பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தோடு இந்து – லங்கா உறவுகளை வலுப்படுத்துவோம் என்பதை வலியுறுத்துகிறோம். இதன் ஊடாக இலங்கை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்றபோதிலும், அவர்களால் எதுவுமே செய்ய முடியாதுள்ளது. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறானதல்ல.

ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்துடன் வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடியளவு பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு காணப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஈராண்டு ஆட்சி காலத்தில் 93 சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். தற்போதைய அரசாங்கத்துக்கு அவ்வாறு ஏதேனும் மாற்றங்களை செய்ய முடியுமா?

1987ஆம் ஆண்டு 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி மற்றும் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஒப்பந்தம் கையெழுத்திட்டு மாகாண சபை முறைமையை கொண்டு வந்தனர்.

அன்று மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஜே.வி.பி. அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். இவர்கள் கூறியதைப் போன்று 13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், நாளையே பாராளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து செய்ய முடியுமல்லவா? அவ்வாறில்லை என்றால் அதனை நீக்குவதாக மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்தமைக்காக ஜே.வி.பி. அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles