டெங்கு தாண்டவம் – 14 நாட்களுக்குள் 4000 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த இரு வாரங்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், டெங்கு நோயால் கடந்த ஜனவரி முதல் நேற்றுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி, குருணாகல், காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துச் செல்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் ஆணையாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, டெங்கு அபாய நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நாளை(15) இடம்பெறவுள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாண ஆளுநரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles