தந்தையும், மகளும் விபத்தில் பலி!

மீரிகம, பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் பலியாகியுள்ளனர்.

மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி நேற்று மாலை பயணித்த காரொன்று மோதியதில் இவர்களிருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

54 வயதான தந்தையும் 14 வயதான மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

விபத்தின் பின்னர் தப்பிச்சென்ற காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles