தமிழ் மக்களை ஏமாற்றுகிறது அநுர அரசு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியையும் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இவர்கள் ஆட்சிக்கு வர முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் தமிழ் மக்களுக்கு ஒன்றையேனும் நிறைவேற்றி உள்ளனரா எனக் கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரகுமார் எம்.பி., மதவாதம், இனவாத ரீதியாகச் செயற்படுகின்ற இனவாதிகள் என்றும் அநுர தரப்பை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடத்திய ஊடக சந்திப்பின்போது நேற்று யாழ். வந்த ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி. கடுமையாக விமர்சித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் பல்வேறு வாக்குறுதிகளை அநுர தரப்பினர் வழங்கியிருந்தனர்.

அதிலும் தமிழ் மக்கள் விடயத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் தீர்வை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வை அவர்கள் ஏற்படுத்தவில்லை. இதுமட்டுமல்லாது இவற்றுக்குத் தீர்வைக் காண்பதற்கு எந்தவித முயற்சிகளையும் அவர்கள் எடுக்கவில்லை.

இவ்வாறாக மக்களை ஏமாற்றித் தொடர்ந்தும் மேடைகளில் ஏறி தம்மைப் புனிதர்களாகக் காட்டி ஏமாற்று வித்தைகளையே அநுர தரப்பினர் செய்து வருகின்றனர்.

தையிட்டி விகாரை விவகாரத்திலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக ஜனாதிபதி அநுர கூறியிருக்கின்றார். தற்போதும் தாமே அதிகாரத்தில் இருக்கின்ற நிலைமையில் முதலில் அந்தப் பிரச்சினைக்கு அவர் உடனடியாகத் தீர்வைக் காண வேண்டும்.

அதைவிடு்த்து தமிழ் மக்கள் விடயத்தில் எதனையும் செய்யாமல் மக்களை ஏமாற்றும் வகையில் மேடைகளில் ஏறி வேறு யார் மீதும் பழியைப் போட்டுவிட்டு தாம் தப்பிக்க முயலக் கூடாது. எனவே, தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் உடனடியாகத் தீர்வை ஏற்படுத்தத் தாயாரா என ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.

மேலும் இனவாதத்துக்கு இடமில்லை என்றும், இனவாதத்துக்குத் தாம் இடமளிக்க மாட்டோம் என்றும் கூறுகின்ற ஜனாதிபதி, இனவாத, மதவாத ரீதியாகப் பரப்புரையைத் தாங்கள் செய்ததை மறக்கக்கூடாது.

தமிழ் மக்கள் விடயத்தில் எப்போதும் இனவாத, மதவாத ரீதியாகச் செயற்படுவது தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி.தான். அந்தக் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதியின் செயற்பாடுகளும் அவரது பேச்சுக்களும் இனவாதம்தான். அவர்களே உண்மையில் இனவாதிகள்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles