இந்நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற மன்னார் பகுதியைச் சேர்ந்த எஸ். சிந்துஜன் என்ற 22 வயதுடைய நபர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நபர் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையில் பொலிஸாரால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக சந்தேகநபர் கடந்த 17ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
