தலவாக்கலையில் கட்டுப்பாட்டு விலையைமீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

தலவாக்கலை நகரில் கட்டுபாட்டு விலைக்கு அதிகமாக முட்டை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவை அதிகாரசபையின் பிரதானி அமில ரத்னாயக்க தெரிவித்தார்.

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய முன்னெக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சிவப்பு நிற முட்டையை 50 ரூபாய்க்கும் வெள்ளை நிற முட்டையை 48 ரூபாய்க்கும் விற்கின்றமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களை இந்த மாதம் 28ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவை அதிகாரசபையின் பிரதானி அமில ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்புகள் நுவரெலியா மாவட்டம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles