தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி: இருவர் கைது!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தம்பலகாமம், கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி பேரின்பராசா (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு நண்பர்களுக்கிடையில் குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறி இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த மேற்படி நபர், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தம்பலகாமம், கோயிலடிப் பகுதியைச்  சேர்ந்த 22, 36 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles