திருமலையில் விபத்து – நால்வர் காயம்

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கிதுல்வுதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று (28) காலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் , பின்புறமாக பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோ மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது கிண்ணியா ஜாவா வீதியை சேர்ந்த முன்னாள் பதிவாளர் எம்.எஸ்.எம்.நியாஸ் (61வயது) மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அதிகாரி (60வயது) அவரது ஊழியரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. ஆட்டோ சாரதியும் காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles