தீபாவளியன்று பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 12 ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தீபாவளி தினத்தன்று மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மதுவரி திணைக்களத்திடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

நேற்று மாலைவரை அமைதி காத்த கலால் திணைக்களம், நுவரெலியா மாவட்ட மதுபானசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு அனுமதி வழங்கிவிட்டு, பதுளை மாவட்டத்துக்கான அனுமதியை மறுத்தது.

இந்நிலையில் இவ்விடயத்தை இன்று காலை ஜனாதிபதியிடம் கவனத்துக்கு கொண்டுசென்றேன். இதன்பின்னர் என்னை தொடர்புகொண்ட ஜனாதிபதி செயலாளர், பதுளை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் ஒருபோதும் மூடப்பட்டது கிடையாது என கலால் திணைக்களம் குறிப்பிட்டது என கூறினார். இது முற்றிலும் பொய்யென சுட்டிக்காட்டி, கடந்த மூன்று வருடங்கள் அனுமதி வழங்கப்பட்ட கடிதங்களின் நகல்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்தேன்.

அதன்பின்னர் பதுளை மாவட்ட மதுபானசாலைகளை நாளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கலால் திணைக்களத்துக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதன்படி பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை தவிர்த்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின், மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை, தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மூடப்படவுள்ளது.

இவ்வாறு மதுபானசாலையை ஒருநாள் குறைப்பதன்மூலம் மதுபாவனையை தடுத்துவிடமுடியாது. ஆனால் மதுபானசாலைகளில் பெரும்பாலான மலையக இளைஞர்கள் வேலைசெய்கின்றனர். அவர்களுக்கும் தீபாவளி கொண்டாட விடுமுறை அவசியம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles